என்ஐஏ கல்வி நிறுவனங்களின் முப்பெரும் விழா நாளை தொடக்கம்

என்ஐஏ கல்வி நிறுவனங்களின் வைரவிழாவை முன்னிட்டு வரும்  அறிவியல்,  பொறியியல் கண்காட்சி  உள்பட முப்பெரும் விழா ஜனவரி 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

என்ஐஏ கல்வி நிறுவனங்களின் வைரவிழாவை முன்னிட்டு வரும்  அறிவியல்,  பொறியியல் கண்காட்சி  உள்பட முப்பெரும் விழா ஜனவரி 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் அங்கமாக 1957-இல் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியை மறைந்த டாக்டர் நா.மகாலிங்கம் துவக்கினார். 1998-இல் இதே வளாகத்தில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது.  நாச்சிமுத்து பாலிடெக்னிக்கின் வைரவிழா,  டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் 20-ஆம் ஆண்டு விழா,  வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் 10-ஆம் ஆண்டு விழா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வரும்  ஜனவரி 4, 5,6 ஆகிய தேதிகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
முதல் நாள் நிகழ்வாக 4-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் தலைமை வகிக்கவுள்ளார். செயலர் இராமசாமி வரவேற்கவுள்ளார். கண்காட்சியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் துவக்கி வைக்கவுள்ளனர். மாணவர்களுக்கான போட்டிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்கிறார்.  கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,  மக்களவை உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன் நன்றி கூறுகிறார்.
5-ஆம் தேதி,  தொழில்துறை கல்விசார் சந்திப்பும்,  என்ஐஏ தொழில்திறன் அறக்கட்டளை தொடக்க விழாவும் நடைபெறவுள்ளது. இதில், மாருதி சுசுகி செயல் இயக்குநர் ஏ.கே.தோமர்,  என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன்,  ரானே குழும நிறுவன ஐடி துறை தலைவர் வெங்கடநாராயணன்,  டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் இயக்குநர் கோவைச்செல்வன்,  போஸ் இந்தியா நிறுவன நிர்வாகி வேணுகோபால், ஜெனடிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகி ரமேஷ்,  டியுவி ரெயின்லேன்ட் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி தோமஸ்பர்மான், நாஸ்காம் நிறுவன மூத்த இயக்குநர் புருஷோத்தமன்  ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.  டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு நன்றி கூறவுள்ளார்.
6-ஆம் தேதி, பொறியியல் கல்லூரியில் 20 ஆண்டுகள் படித்து சாதனை படைத்த 1000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி இயக்குநர் ரங்காபழனிச்சாமி சிறப்புரையாற்றுகிறார். கல்லூரி மூத்த செயல் திட்ட மேலாளர் திருவேங்கடம் நன்றி கூறுகிறார். இந்த தகவலை என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் இராமசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com