ரயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை  நிறுத்த அனுமதிக்க வேண்டும்: காவல் ஆணையரிடம் மனு

கோவை ரயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க கோரி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம்  செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவை ரயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க கோரி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம்  செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சதீஷ் தலைமையில் ஆட்டோ தொழிலாளர்கள்,  மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
கோவை ரயில் நிலைய வளாகத்துக்குள் ஆட்டோக்களை நிறுத்தி வாடகைக்கு செல்ல  2004 ஆண்டு வரை ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. பின்பு முன்புற பகுதியில் புனரமைப்பு பணி நடைபெற்று முடியும் வரை ஆட்டோக்களை ரயில் நிலைய முகப்பு பகுதியில் நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது.  ஆனால்,   புனரமைப்பு பணிகள் முடிவடைந்த பின்பு அந்த இடம் வாடகை கார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்,  ஆட்டோக்கள் நிறுத்தப்பட்ட ரயில் நிலைய முகப்பு பகுதியில் உதகை மலை ரயில் என்ஜின் நிறுவப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆட்டோக்களை அப்பகுதியிலும் நிறுத்தக்கூடாது என்று கூறி வரும் ரயில்வே நிர்வாகம்,  போலீஸாரை கொண்டு ஆட்டோக்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. 
ஏற்கெனவே ரயில் நிலையத்துக்குள் ஆட்டோக்களை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் போலீஸார் ஆட்டோக்களை அப்புறப்படுத்தக் கூடாது. இதனால் ஆட்டோ தொழிலை நம்பியுள்ள 40 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com