சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி: இருவருக்கு அபராதம்

அன்னூர் அருகே, பூலுவபாளையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சந்தன  மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற இருவருக்கு வனத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

அன்னூர் அருகே, பூலுவபாளையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சந்தன  மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற இருவருக்கு வனத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
அன்னூர் ஒன்றியம், ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பூலுவபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். 
இவர், தனது வீட்டில் சந்தன மரம் வளர்த்து வருகிறார். சுமார் 10 ஆண்டுகள் வயதுடைய அந்த சந்தன மரத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் இருவர் வெட்டிக் கடத்த முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து, சிறுமுகை வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து, அவர்கள் இருவரையும்  அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற வனத் துறையினர் இருவருக்கும் தலா ரூ. 9 ஆயிரம் வீதம் ரூ. 18 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
அபராதத் தொகையைச் செலுத்தியதையடுத்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com