சிறுமுகை அம்பாள் பள்ளிகள் ஆண்டு விழா

சிறுமுகை ஸ்ரீ அம்பாள் பப்ளிக் மற்றும் அம்பாள் மெட்ரிக். பள்ளிகளின் சார்பில் 10-ஆம் ஆண்டு விழா, பள்ளி மைதான வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

சிறுமுகை ஸ்ரீ அம்பாள் பப்ளிக் மற்றும் அம்பாள் மெட்ரிக். பள்ளிகளின் சார்பில் 10-ஆம் ஆண்டு விழா, பள்ளி மைதான வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு பள்ளித் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் கீதா பழனிசாமி முன்னிலை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி வேலுசாமி வரவேற்றார். பள்ளி முதல்வர்கள் சந்திரன் (பப்ளிக் பள்ளி), மாலதி (மெட்ரிக், பள்ளி) ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.  திருப்பூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமரன் வாழ்த்தி பேசினார். 
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய ரசாயன மற்றும் உரத்துறை முன்னாள் செயலர் சுப்புராஜ், கடந்த ஆண்டு 10, 12-ஆம்  வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கெளதம், ஷகிலேஸ், சாந்தினி, இந்துப்ரியா, ஷப்ரீனா, வீரதேவி, ஆல்பிரெட் பிலிப், கன்யா ஆகியோருக்கும், விளையாட்டில் மாவட்ட, மாநில, தேசிய அளிவல் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் பரிசுகள் வழங்கிப் பேசினார். 
இவ்விழாவில் நகரமன்ற முன்னாள் தலைவர் சதீஷ்குமார், மருத்துவர் மகேஸ்வரன், அன்னூர் நடராஜன், சிறுமுகை துரை உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.  தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மெட்ரிக். பள்ளியின் துணை முதல்வர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com