நஞ்சையா-லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

மேட்டுப்பாளையம் நஞ்சையா - லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நஞ்சையா - லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முதல்வர் கெளசல்யா தலைமை வகித்தார். காந்தி கிராமியப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை முன்னாள் இயக்குநர் சுப்பையா ஒலிம்பிக் கொடியேற்றி வைத்தும், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றும் விளையாட்டு விழாவைத் தொடக்கிவைத்தார். இதில், கல்லூரியின் நான்கு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், 100 மீ. முதல் 500 மீ. வரை ஓட்டப்பந்தயம், கால் பந்து, கைப்பந்து, எறி பந்து, நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற போட்டிகளை உடற்கல்வி இயக்குநர் கார்த்தி தலைமையில் ஆசிரியர்கள் நடத்திவைத்தனர்.
இதில், அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று கல்லூரியின் காந்தி அணி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. காமராஜர் அணி இரண்டாவது இடம் பெற்றது.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரிச் செயலர் முத்துசாமி தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக அதிகாரி டி.டி.எஸ். பாஸ்கரன் முன்னிலை வகித்தார். காவல்துறை முன்னாள் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கும், கோலப்போட்டியில் வென்ற மாணவிகளுக்கும், தனிநபர் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களுக்கும் கோப்பை, விருது உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.
இதில், துறைத் தலைவர்கள் ராஜ்குமார், சம்பத்குமார், மகேஸ்வரி, மோகன், கலைவாணி, கற்பகம், பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com