மாசாணியம்மன் கோயிலுக்கு கொடி மரம் கொண்டு வந்த பக்தர்கள்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவை முன்னிட்டு, கொடியேற்ற நிகழ்ச்சிக்காக 95 அடி உயரமுள்ள கொடி மரத்தை பக்தர்கள் சனிக்கிழமை கொண்டு வந்தனர்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவை முன்னிட்டு, கொடியேற்ற நிகழ்ச்சிக்காக 95 அடி உயரமுள்ள கொடி மரத்தை பக்தர்கள் சனிக்கிழமை கொண்டு வந்தனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் விழா தொடங்கும். இந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக சர்க்கார்பதியில் இருந்து 95 அடி உயரம் உள்ள கொடி மரத்தை பக்தர்கள் சனிக்கிழமை வெட்டி எடுத்துக் கொண்டுவந்தனர். சர்க்கார்பதி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் அந்தக் கொடி மரத்தை வைத்து, மஞ்சள் புடவை சாத்தி, விபூதி, மஞ்சள், குங்குமமிட்டு, பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சர்க்கார்பதியில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோயில் வரை 17 கி.மீ. தூரத்துக்கு தோளில் சுமந்து வந்தனர்.
மாசாணியம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கொடிமரம் ஜனவரி 16-ஆம் தேதி சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிம்மக்கொடி கட்டி நிலை நிறுத்தப்படவுள்ளது.
கொடிமரம் கொண்டு வரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார், கோயில் நிர்வாகத்தினர், கோயில் தலைமை முறைதாரர் மனோகரன், முறைதாரர்கள் கிருஷ்ணன், அருளாளிகள் அருண், குப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com