பொள்ளாச்சியில் காமராஜர் பிறந்த தினம்

பொள்ளாச்சியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழைப் பெண்கள், மாணவர்களுக்கு முறையே சேலை, சீருடைகள் வழங்கப்பட்டன.

பொள்ளாச்சியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழைப் பெண்கள், மாணவர்களுக்கு முறையே சேலை, சீருடைகள் வழங்கப்பட்டன.
இதற்கு தமிழ்நாடு பனை, தென்னைத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி வாழ் நாடார் சங்கத் தலைவர் செல்வகுமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேலுச்சாமி, செல்வராஜ், சதீஷ், வசந்த் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்றார். அரசுப் பள்ளியில் படிக்கும் 100 ஏழை மாணவர்களுக்கு சீருடைகளும், 300 பெண்களுக்கு சேலைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. கல்வியில் சிறந்த 4 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
வால்பாறை அரசு, தனியார் பள்ளிகளில்...: வால்பாறை வட்டாரத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறையை அடுத்த நல்லகாத்து எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் காமராஜர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். சோலையாறு டேம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. வால்பாறை தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது. மேலும், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com