மென்பொருள் பதிவேற்றம்: கோவை கோட்டத்தில் மே 25 முதல் தபால் சேவைகள் நிறுத்தம்

கோவை தபால் கோட்டத்தில் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் மே 25 முதல் 28-ஆம் தேதி வரை தபால் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கோவை தபால் கோட்டத்தில் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் மே 25 முதல் 28-ஆம் தேதி வரை தபால் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
தபால் நிலையங்களில் தனியார் வங்கி சேவைக்கு இணையான சேவையை வழங்க அனைத்து தபால் நிலையங்களிலும் சி.எஸ்.ஐ. எனும் கோர் சிஸ்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிஜிட்டல் மயமாக்கும் வகையில் புதிய மென்பொருள் பதிவேற்றம் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, கோவை தபால் கோட்டத்தில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்கள், 80 துணை தபால் நிலையங்கள் மற்றும் 96 கிளைத் தபால் நிலையங்கள் என மொத்தம் 178 தபால் நிலையங்களில் பண அஞ்சல், தபால் வழங்குதல், தபால் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வரும் மே 25-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறாது என்று கோவை கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com