"கால்நடை உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்'

கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பிரிவில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்

கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பிரிவில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடைப் பாரமரிப்பு உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் அ.சிவகுமார் தலைமையில் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
கால்நடை உதவியாளர் பணியிடத்தில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் என்பதைக் கால்நடை உதவியாளர் என மாற்ற வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 21 மாத அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேசிங்குராஜன், நிர்வாகிகள் டேவிட் மோகன்குமார், மோகன்தாஸ், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com