சர்வதேசப் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி

மதுக்கரையில் சர்வதேசப் பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

மதுக்கரையில் சர்வதேசப் பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் அக்டோபர் 13ஆம் தேதி சர்வதேசப் பேரிடர் இன்னல் குறைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை வட்டாட்சியர் விஜயலட்சுமி தொடக்கிவைத்தார். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எந்தெந்த வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை நைட்டிங்கேல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர். 
மதுக்கரை அரசுப் பள்ளியில்  தொடங்கிய பேரணி கடைவீதி வழியாகச் சென்று மதுக்கரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. 
இப்பேரணியில், நைட்டிங்கேல் கல்லூரித் துணை முதல்வர் பொன்னாம்மாள், துணை வட்டாட்சியர் நாகராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெனீமா, கிராம உதவியாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி: கேஎம்சிஹெச் மருத்துவமனையின் பேரிடர் மேலாண்மை சிகிச்சைக் குழுவினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர்  இணைந்து இப்பயிற்சியை வழங்கினர்.
இந்தப் பயிற்சியில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வி, இருப்பிட மருத்துவர் ராஜா,  அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ்,  மருத்துவமனைப் பணியாளர்கள், செவிலியர்கள் , காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்துகொண்டனர். 
வால்பாறை: சர்வதேசப் பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை ஒட்டி வால்பாறையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி  சனிக்கிழமை நடைபெற்றது. 
வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகியன சார்பில் நடத்தப்பட்ட இப்பேரணியை வால்பாறை வட்டாட்சியர் வெங்கடாசலம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். 
இதில், பங்கேற்ற வால்பாறை பராதியார் பல்கலைக் கழகக் கல்லூரி மாணவர்கள் மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்ப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களைப் பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர். 
இந்நிகழ்ச்சியில், காவல் துறை உதவி ஆய்வாளர் நந்தகுமார், கல்லூரிப் பேராசிரியர் விஜயகுமார் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com