படைப்பாற்றல் திறனே பொறியாளர்களுக்கு அவசியம்: மயில்சாமி அண்ணாதுரை

படைப்பாற்றல் திறனே பொறியாளர்களுக்கு இன்றியமையாதது என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

படைப்பாற்றல் திறனே பொறியாளர்களுக்கு இன்றியமையாதது என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
இந்திய வார்ப்பட நிறுவனத்தின் கோவை பிரிவு, குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை திங்கள்கிழமை நடத்தியது. 
இந்நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையச் செயற்கைக்கோள் பிரிவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்போது, அவர் மாணவர்களிடையே பேசியதாவது: 
உலகிலேயே அதிகப் பொறியாளர்கள் இந்தியாவில்தான் உருவாகிறார்கள். வார்ப்பட தொழிற்சாலைகளில் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய தொழில்நுட்பமான பவுண்டரி 4.0 எனும் புதிய தொழில்நுட்பம் இத்துறையில் மிகப் பெரிய பங்காற்ற உள்ளது.
தற்போது பவுண்டரிகளில் பொருள்களை ஏற்றி இறக்குவதில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
இதைத் தொடர்ந்து வர உள்ள பல புதிய தொழில்நுட்பங்கள் வார்ப்படத் தொழிலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. மாணவர்கள் தங்களது திறன்களை சமூக மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும். படைப்பாற்றல் திறனே பொறியாளர்களுக்கு இன்றியமையாதது. ஒவ்வொரு பொறியியல் மாணவரும் பின்னாளில் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்றார்.
இதில், சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனத்தின் வார்ப்படப் பிரிவின் முதன்மை நிர்வாகி நித்யானந்தன் தேவராஜ், இந்திய வார்ப்பட நிறுவனத்தின் கோவை பிரிவுத் தலைவர் ஜி.எழில், தலைமைச் செயல் அதிகாரி பார்த்திபன், கல்லூரி முதல்வர் ஜே.ஜேனட்,  இயந்திரவியல் துறைத் தலைவர் பி.அசோகவர்தன், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com