566 பயனாளிகளுக்கு ரூ.1.70 கோடி கடனுதவி

கோவை மாவட்டத்தில் டாம்கோ திட்டத்தின் கீழ் 566 பயனாளிகளுக்கு ரூ.1.70 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் டாம்கோ திட்டத்தின் கீழ் 566 பயனாளிகளுக்கு ரூ.1.70 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்ஸியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன் திட்டம், கல்விக் கடன், கறவை மாடு வாங்க கடனுதவி, ஆட்டோ கடன் உள்ளிட்ட கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 இதில் டாம்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். புதிதாக தொழில் தொடங்கவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெறலாம். கோவை மாவட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கு 156 உறுப்பினர்களுக்கு ரூ.95.15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
 மேலும் டாம்கோ திட்டத்தின் மூலம் தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம், பெட்டிக் கடை, கறவை மாடு, ஆட்டோ கடன் போன்ற சிறு தொழில் தொடங்க கோயம்புத்தூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 410 பயனாளிகளுக்கு ரூ.75.57 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com