கோவையில் செப்டம்பர் 17 இல் சாய்பாபா திருப்பாதுகை தரிசனம்

கோவையில் திங்கள்கிழமை (செப்டம்பர் 17)  ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோவையில் திங்கள்கிழமை (செப்டம்பர் 17)  ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஷீரடி சாய்பாபா மகா சமாதி நூற்றாண்டு மகா உற்சவ விழாக் குழு மற்றும்ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் நிரூபா ஸ்ரீராம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 ஷீரடி சாய்பாபா மகா சமாதியடைந்த நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு அக். 18ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஷீரடியில் உள்ள சாய்பாபாவின் திருப்பாதுகைகள் கடந்த ஆண்டு கோவைக்கு கொண்டுவரப்பட்டன. அப்போது, சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் திருப்பாதுகையை தரிசித்தனர்.
இந்நிலையில்,  இரண்டாவது முறையாக மீண்டும் சாய்பாபாவின் திருப்பாதுகைகள் கோவைக்கு கொண்டுவரப்படுகின்றன. கோவைக்கு வரும் திருப்பாதுகை, கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். இதையொட்டி, ஷீரடியில் இருந்து வரும் பண்டிதர்கள் உள்ளிட்டோர், சிறப்பு ஆரத்தி, பூஜைகள் நடத்துகின்றனர்.
 இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று திருப்பாதுகையை தரிசனம் செய்யவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தரிசனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஷீரடியில் இருந்து வரும் விபூதிப் பிரசாதம் வழங்கப்படும். மேலும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் திருப்பாதுகையை தரிசக்க தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 பின்னர் கோவையில் இருந்து திருப்பாதுகைகள் ஷீரடிக்கு கொண்டுச் செல்லப்படும்.  அக்டோபர் 18ம் தேதி மகா சமாதி தினம் ஷீரடியில் கொண்டாடப்படுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com