கல்வி என்ற ஆயுதத்தால் இந்த உலகையே ஆளலாம்: ஏடிஜிபி சைலேந்திர பாபு

கல்வி என்ற ஆயுதத்தைக் கையாண்டால் இந்த உலகத்தையே நாம் ஆளலாம் என்று ஏடிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.


கல்வி என்ற ஆயுதத்தைக் கையாண்டால் இந்த உலகத்தையே நாம் ஆளலாம் என்று ஏடிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
வாழ்க்கையில் சாதனைகளை படைக்கவே நாம் இப்பிறவி எடுத்துள்ளோம். பெற்றவர்களை மதிப்பது மட்டுமல்லாமல் இவ்வுலகில் பிறந்த எல்லோரையும் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். எல்லோரும் நல்லவர்களே. ஒவ்வொரு நாளையும் நாம் நமக்கான முக்கிய நாளாக எடுத்துக்கொண்டு பல்வேறு அனுபவங்களின் வாயிலாக திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வியுடன் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
படிக்க வசதியில்லாத ஏழை குடும்பத்தில் பிறந்த சரவணன் தனது அறிவாற்றலால் உயர்ந்து ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராக பணிபுரிகிறார். அறிவியல், தத்துவ மேதைகளைப் போல நாமும் கல்விஅறிவுடன் ஆராய்ச்சித் திறனை வளர்த்துக் கொண்டு இந்த நாட்டையும் நம் வீட்டையும் காப்பாற்ற சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுவே உங்களை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும், கல்வி கற்பித்த ஆசானுக்கும் தரும் மகிழ்ச்சி மிக்க மரியாதை ஆகும் என்றார்.
விழாவில் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
விழாவில் பெற்றோர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com