பேரீச்சம் பழ பாக்கெட்டில் புழுக்கள்: வாடிக்கையாளர் புகார்

சூலூரை அடுத்த பாரதிபுரத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பேரீச்சம்பழ பேக்கட்டில் புழுக்கள் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால்


சூலூரை அடுத்த பாரதிபுரத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பேரீச்சம்பழ பேக்கட்டில் புழுக்கள் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்ப்குதியினர் அதிர்ச்சிய்டடைந்தனர்
சூலூர் அருகே உள்ளது பாரதிபுரம் கிராமம். இங்கு சலூன்கடை நடத்திவரும் சண்முகம் அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வெள்ளிக்கிழமை பேரிச்சம் பழம் வாங்கியுள்ளார். பாக்கெட்டை திறந்துபார்த்தபோது அதில் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. உடனே கடை உரிமையாளர் சுரேசுக்கு (35) தகவல் கொடுத்துள்ளார். அவர் அந்த பாக்கெட்டை வாங்கிக்கொண்டு வேறு பாக்கெட் கொடுத்துள்ளார். இந்நிலையில் உணவு பாதுகாப்பத் துறை அதிகாரிகள் அங்கு வந்து சோதனையிட்டதாக கூறப்படுகிறது. அந்த பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள காலாவதி தேதி அடுத்த மாதம் இறுதிவரை உள்ளது தெரிந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் சுரேஷ் கூறுகையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் தரத்தையோ, அவற்றின் தன்மையையோ நாங்கள் பார்க்கமுடியாது. பேரிச்சம் பழ பாக்கெட்டில் புழுக்கள் இருந்தது உண்மைதான். பெரிய நிறுவன பொருள்கள் தரமற்ற வகையில் இருப்பதால் இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தங்களின் வணிகம் பாதிப்படையும். எனவே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவற்றின் தரத்தை உறுத்திப்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com