உலக புத்தக தின விழா: இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

உலக புத்தக தின விழாவையொட்டி, புத்தக வாசிப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

உலக புத்தக தின விழாவையொட்டி, புத்தக வாசிப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட நூலக ஆணைக்குழு, நந்தா பொறியியல் கல்லூரி, நூலக மேம்பாடு அமைப்பு ஆகியவை சார்பில் இப்பேரணி பெருந்துறை பேருந்து நிலையம் அருகே தொடங்கப்பட்டது. பேரணியை மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தொடக்கி வைத்தார்.
பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகன் தலைமை வகித்தார்.
வேளாளர் மகளிர் கல்லூரி நூலக அறிவியல் துறைத் தலைவர் ஸ்டீபன் நூலக வாசிப்பின் அவசியம் குறித்து விளக்கினார்.
இப்பேரணி, பெருந்துறை, கவுண்டச்சிபாளையம், ரங்கம்பாளையம் ஜீவாநகர், திண்டல், மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வழியாக சம்பத்நகர் வரை நடைபெற்றது. தொடர்ந்து, சம்பத்நகரில் உள்ள நவீன நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
புத்தகக் கண்காட்சியை நந்தா கல்விக் குழுமத் தலைவர் வெ.சண்முகன் திறந்து வைத்துப் பேசினார். விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கவிஞர் முத்துசாமி கவிதையை வாசித்தார். கோவை நாவலாசிரியர் சி.ஆர்.ரவீந்தரன் இலக்கிய சொற்பொழிவாற்றினார்.
இதில், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் அ.சுந்தரசேகர், பொது நூலக் துறையைச் சார்ந்த நூலகர்கள், நந்தா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள், நூலக மேம்பாட்டு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com