ஓலைச் சுவடிகளில் புதைந்து கிடந்த இலக்கியங்களை கண்டுபிடித்துக் கொடுத்தவர் உ.வே.சா.: எழுத்தாளர் தேவிபாரதி

ஓலைச் சுவடிகளில் புதைந்து கிடந்த இலக்கியங்களைக் கண்டுபிடித்து கொடுத்தவர் உ.வே.சா. என்று எழுத்தாளர் தேவிபாரதி புகழாரம் சூட்டினார்.

ஓலைச் சுவடிகளில் புதைந்து கிடந்த இலக்கியங்களைக் கண்டுபிடித்து கொடுத்தவர் உ.வே.சா. என்று எழுத்தாளர் தேவிபாரதி புகழாரம் சூட்டினார்.
உலக புத்தக தினத்தையொட்டி சிவகிரி கிளை நூலகம் சார்பில் சிவகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சி, புத்தக தின விழா ஆகியவற்றைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
இன்றைக்கு நூலகங்கள் வந்துவிட்டன. ஆங்காங்கு புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. நூலகங்களில் ஒரு அரை மணி நேரம் செலவிட்டால்போதும் தமிழ் இலக்கியம் குறித்து நாம் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்.
இவை போன்ற எந்த ஒரு வசதியும் இல்லாத காலகட்டத்தில்தான் தமிழ் தாத்தா என்று கூறப்படுகிற உ.வே.சாமிநாத அய்யர் போக்குவரத்து வசதி இல்லாத அன்றைய காலகட்டத்தில் ஊர் ஊராகத் தேடியலைந்து ஓலைச் சுவடிகளை சேகரித்து, அவற்றை தொகுத்து அதன் மூலமாக நாம் தமிழ் இலக்கியத்தின் தொன்மைகளை உணரச் செய்தார். அவரது கண்டுபிடிப்பில்தான் நமக்கு சிலப்பதிகாரம் கிடைத்தது. மணிமேகலை யார் என்று கண்டுகொண்டோம். நம்முடைய அடையாளமாக கண்ணகியை மீட்டெடுத்தோம். மனுநீதி சோழன் வாழ்க்கை வரலாறைத் தெரிந்து கொண்டோம்.
தமிழ் மொழியில் ஓலைச் சுவடிக்குள் மறைந்து கிடந்த மாபெரும் இலக்கியங்களை கண்டுபிடித்துக் கொடுத்த மாபெரும் கொடையாளி உ.வே.சா என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு, நூலக வாசகர் வட்டத் தலைவரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான செ.பரமு (எ) ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளை நூலகர் பெரியசாமி வரவேற்றார். சிவகிரியில் உள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழகக் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.வடிவேல், நவரசம் கல்லூரிப் பேராசிரியர் சுகுமார், ஓய்வுபெற்ற கூட்டுறவு இணைப் பதிவாளர் மு.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் தலைமை ஆசிரியர் சி.ஆறுமுகம், நுகர்வோர் பாதுகாப்புக் குழு பேரவைச் செயலாளர் கு.சண்முகம், நண்பர்கள் இலக்கிய வட்ட அமைப்பாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com