மே 1-இல் ராமானுஜர் 1000-ஆவது ஜயந்தி விழா

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதப் பெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா மே 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதப் பெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா மே 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
வைணவ ஆச்சார்யரான ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2016 சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் தொடங்கி இந்த ஆண்டு மே 1-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ராமானுஜர் ஜயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கிடாம்பி நாராயணன் சுவாமி உபந்யாசமும், மாலை 5 மணிக்கு ஆயக்குடி குமார் என்கிற அனந்தகிருஷ்ணன் பாகவதரின் பஜனையும் நடக்கிறது. மே 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு ராமானுஜர் மூலவர், உற்சவர்களுக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு கோஷ்டி பாராயணமும், தொடர்ந்து ராமானுஜர் உற்சவமூர்த்தி பூ பந்தல் அலங்கார வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை எம்பெருமானார் நித்ய கைங்கர்ய அறக்கட்டளைத் தலைவர் உமாபதி, நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com