கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீர் திறக்க வேண்டும்: மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் உயிர்த் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கோரிக்கை விடுத்தார்.

கீழ்பவானி வாய்க்காலில் உயிர்த் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கோரிக்கை விடுத்தார்.
 இக்கூட்டத்துக்கு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமை வகித்துப் பேசியதாவது:
 இங்கு அதிக மனுக்கள் வீட்டுமனைப் பட்டா கேட்டு வந்துள்ளன. பெருந்துறை பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்க நத்தம் புறம்போக்கு நிலங்கள் இல்லை. ஆகவே, அரசு அடுக்குமாடி குடியிருப்புகள்அமைத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான தென்னை  மரங்களைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காகவும் கீழ்பவானி வாய்க்காலில் உயிர் நீர் திறக்க வேண்டும் என்றார்.
 சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற பின்னர் பேசியதாவது:
  அத்திக்கடவுத் திட்டத்தை நிறைவேற்ற அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இத்திட்டம் மூலம், இப்பகுதியில் உள்ள 40 சதவீத குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படும். இப்பகுதியில்,  குடியிருப்பு மதிப்பீட்டில் 10 சதவீதம் மக்கள் பங்களிப்புடன், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்து, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார். அதில், ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும் என்று கூறினார்.   இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், ஈரோடு மேற்கு எம்.எல்.ஏ. கே.வி.இராமலிங்கம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம் உள்பட அரசு அதிகாரிகள்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com