கொசு ஒழிக்கும் பணி மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: சுகாதாரத் துறை முதன்மை செயலாளர்

கொசு ஒழிப்புப் பணி மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கொசு ஒழிப்புப் பணி மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
 தமிழக அரசின் ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், தொற்று நோய்த்  தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் கோபி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு, சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தலைமை வகித்தார். சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டெங்கு காய்ச்சல் பரவும் முறை, அவற்றைத் தடுக்கும் முறைகள், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாணவிகளிடம் பேசினார். டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, கொசு ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து, கோபி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து, அவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆனந்தனிடம் கேட்டறிந்தார்.
 தொடர்ந்து, அவர் பேசியதாவது:
  காய்ச்சல் ஏற்பட்டால் போலி மருத்துவரிடமோ, தானாக மருந்துக் கடையில் மாத்திரைகள் வாங்கியோ உட்கொள்ளக் கூடாது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். இதுகுறித்து, பள்ளி மாணவர்கள் மூலமாக சுற்று வட்டாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்புப் பணி மக்கள் இயக்கமாக மாற வேண்டும்
 தற்போது டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. அதைக் கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையில்  500-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்கள், 770 பள்ளி சுகாதார வாகனங்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்கள் பயன்படுத்தப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ,1300-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என்றார்.
 இதில், கோபி கோட்டாட்சியர் கோவிந்தராஜன், சுகாதாரத் துறையினர், மருத்துவக் குழுவினர்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com