சுற்றுச்சூழல் புத்தகங்களுக்கான சிறப்பு அரங்கு

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் புத்தகங்களுக்காக சிறப்பு அரங்கை பூவிலகின் நண்பர்கள் எனும் சுற்றுச்சூழல் அமைப்பு அமைத்துள்ளது.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் புத்தகங்களுக்காக சிறப்பு அரங்கை பூவிலகின் நண்பர்கள் எனும் சுற்றுச்சூழல் அமைப்பு அமைத்துள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு நெருக்கடிகள் இப்போது எழுந்துள்ளன. இதுபோன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும், சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
இந்த அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் புத்தகங்களுக்கான சிறப்பு அரங்கில் இந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட 46 புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர பிற பதிப்பகங்கள் வெளியிட்ட சுற்றுச்சூழல், உடல்நலம் சார்ந்த புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளன. அலையாத்தி காடுகள், கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர், பழந்தமிழர் வேளாண்மை, மண்புழு, பூமிக்கான பிரார்த்தனை, வலசை பறவைகள் வாழ்விட சிக்கல்கள், புல்லும் சிறியது, சுற்றுச்சூழல் பிரச்னைகள், சட்டம், தீர்வுகள் உள்ளிட்ட புத்தகங்கள் புத்தக ஆர்வலர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதேபோல, மருத்துவர் கு.சிவராமன் எழுதிய உடல் நலம் சார்ந்த புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com