பெருந்துறையில் இன்று பா.ம.க. பொதுக் கூட்டம்: அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

அவிநாசி -அத்திக்கடவு திட்டம் தொடர்பான பொதுக் கூட்டம், ஈரோடு அருகே பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர்

அவிநாசி -அத்திக்கடவு திட்டம் தொடர்பான பொதுக் கூட்டம், ஈரோடு அருகே பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பொ.வை.ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கை:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 70 ஆண்டுகால கோரிக்கையாகும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். விவசாய விளைநிலங்கள் பயனடைவதுடன், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.
31 பொதுப் பணித் துறை ஏரிகளும், 40 ஊராட்சி ஒன்றிய குளங்களும், 630 நீர்நிலைகள் என மொத்தம் 701 பாசன ஆதாரங்களை நிரப்பும் திட்டமாகும். இதுமட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்.
1957-ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலம் முதல் இன்றுவரை பேசப்பட்டு வரும் இத்திட்டம் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை போர்கால நடவடிக்கையாக நிறைவேற்றக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட்13-ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) காலை 9 மணிக்கு கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் பவானி ஆற்றை பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பார்வையிடுகிறார்.
அவருடன் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, கட்சிப் பிரமுகர்களும் பார்வையிடுகின்றனர். இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு காரமடையிலும், 11.30 மணிக்கு அன்னூரிலும், மதியம் 1 மணிக்கு திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலும், மாலை 3 மணிக்கு சேவூரிலும், 4 மணிக்கு ஈரோடு மாவட்டம், நம்பியூரிலும், 5 மணிக்கு குன்னத்தூரிலும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரசாரப் பயணத்தில் ஈடுபடுகிறார்.
இரவு 6 மணியளவில் பிரசாரப் பயணம் பெருந்துறையை வந்தடையும். இறுதியில் பெருந்துறை அண்ணா சிலை அருகில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும். இப்பொதுக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கட்சியின் முன்னணித் தலைவர்கள் பேசுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com