உணவு வணிகர்கள் உரிமம் பெற ஆட்சியர் அறிவுறுத்தல்

உணவுப்பொருள் விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களது நிறுவனங்களுக்கு  கட்டாயமாக உரிமம், பதிவுச் சான்று  பெற வேண்டும் என ஆட்சியர்

உணவுப்பொருள் விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களது நிறுவனங்களுக்கு  கட்டாயமாக உரிமம், பதிவுச் சான்று  பெற வேண்டும் எனஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். எஸ்.பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உணவுப் பொருள் வணிகம் செய்யும்  அனைவரும் உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமம்-பதிவுச் சான்று பெற்று வணிகம் செய்ய வேண்டும்.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம்  வணிக நிறுவனங்களில் இது வரை 10 ஆயிரம் பேர்  மட்டுமே உரிமம்- பதிவுச் சான்று பெற்றுள்ளனர்  
எனவே, அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும்.    இந்த உரிமத்தைப் பெற விரும்புவோர் ‌w‌w‌w.‌f‌s‌s​a‌i.‌g‌o‌v.‌i‌n <‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌f‌s‌s​a‌i.‌g‌o‌v.‌i‌n>
 என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம்-பதிவுச்சான்று பெறாத வணிகர்கள் மீது உணவுப்பாதுகாப்பு தர சட்டம் 63-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும்,  ஈரோடு மாவட்டத்தில் உணவுப்பொருள் தொடர்பான புகார்களை  94440-42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ 0424-2223545 என்ற அலுவலக எண்ணிலோ தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com