நஞ்சை ஊத்துக்குளி ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

மொடக்குறிச்சியை அடுத்துள்ள நஞ்சை ஊத்துக்குளி ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

மொடக்குறிச்சியை அடுத்துள்ள நஞ்சை ஊத்துக்குளி ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.
இக் கோயில் திருவிழா  நவம்பர் 21-ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன்  தொடங்கியது. தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.  டிசம்பர் 3-ஆம் தேதி கிராமசாந்தி விழாவும், மறுநாள் திங்கள்கிழமை கொடியேற்றமும் நடைபெற்றது. செவ்வாய்க் கிழமை மகம் தேர் ஊர்வலமும், இரவு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. 
6-ஆம் தேதி காலை 11மணிக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்துவர காவிரியாற்றுக்கு மேளதாளங்களுடன் புறப்பட்டுச் சென்றனர். இரவு அக்னிசட்டி, காவடியாட்டம்  தீர்த்தக் குடம் செலுத்துதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை (டிசம்பர் 7) காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. 
முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி ஊஞ்சல் ஊர்வலம், கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கருந்தேவன்பாளையம் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும்,  சனிக்கிழமை மறு அபிஷேகமும் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. 
சனிக்கிழமை இரவு மாநில அளவிலான ஆண், பெண் கபடி போட்டிகள்  நடைபெற உள்ளன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.20ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட  உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com