மொழிதான் எல்லாவற்றுக்கும் முதன்மையானது: தமிழ் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ம. ராசேந்திரன்

மொழிதான் எல்லாவற்றுக்கும் முதன்மையானது என்றார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம. ராசேந்திரன்.

மொழிதான் எல்லாவற்றுக்கும் முதன்மையானது என்றார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம. ராசேந்திரன்.
ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் முதலியார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் யூ.என். முருகேசன் தலைமையில் தமிழ்த் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற  பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:
 மனிதனின் மரியாதைக் காக்கும் இலக்கியங்கள் நிறைந்துகிடப்பது தமிழில் மட்டும்தான்.  புலம் பெயர்ந்தோர் என்றால் நிலமா, காடா, கடலா, ஆறா எதைவிட்டு புலம் பெயர்ந்தார் என நினைக்கத் தோன்றும். ஆனால்,  புலம் என்றால்  நூல் எனும் பொருளும் உண்டு. எல்லைக் கோடுகளை அடித்து நொறுக்கியவர்கள் தமிழர்கள். குமரியும், வடவேங்கடமும் இன்று தமிழகத்துடன் இல்லை. ஆனால், ஒரு நாட்டின் எல்லைகளை மொழிதான் தீர்மானிக்கிறதே தவிர, அதிகாரத்தால் இல்லை.  
புலம் பெயர்ந்தவர்களால் உலகம் தமிழால் வியாபித்திருக்கிறது எனப் பெருமைப்படலாம். ஆனால், வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் யாருமற்ற அநாதைகள் அல்ல.  உங்களிடம் தமிழ் இருக்கிறது.  தமிழர்கள் எந்த நாட்டுக்கு புலம் பெயர்ந்தாலும் தங்கள் மண்ணைச் சுற்றியே அவர்களது எண்ணமும், செயலும் இருக்கும். நாடு, மதம், ஜாதி என எதை வேண்டுமானாலும்  நாம் வேண்டாம் எனக் கூறலாம். ஆனால்,  மொழி வேண்டாம் என யாரும் கூறமுடியாது.  காரணம், மொழிதான் எல்லாவற்றுக்கும் முதன்மையானது என்பதை இன்றைய இளம் தலைமுறை உணரச்செய்யும் பணியை இது போன்ற கருத்தரங்குகள் முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
முதல்வர் இரா. வெங்கடாசலம் வரவேற்றார்.  கல்லூரிச் செயலர், தாளாளர் கே.கே. பாலுசாமி முன்னிலை வகித்தார்.  தமிழ்த் துறைத் தலைவர் க. பன்னீர்ச்செல்வம்  நோக்கவுரை நிகழ்த்தினார். 
பொருளாதாரத் துறைத் தலைவர் நா. மணி அறிமுக உரையாற்றினார்.  கருத்தரங்க ஆய்வுக் கோவையை இலங்கை எழுத்தாளர் தி. ஞானசேகரன் வெளியிட்டார். அதை டென்மார்க் எழுத்தாளர் கலாநிதி ஜீவகுமாரன் பெற்றுக் கொண்டார். இலங்கை பேராதனை பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்லத்துரை சுதர்சன் வாழ்த்தினார்.  கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், உதவிப் பேராசிரியர் அ. ராமலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com