பவானியில் அம்மா உணவகத்தில் ஆட்சியர் சோதனை

பவானி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினார். 

பவானி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினார். 
பவானி புதிய பேருந்து நிலையத்துக்கு ஆட்சியர் வியாழக்கிழமை காலை திடீரென வந்தார். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவின் தரம், சமையலறை, பொதுமக்கள் உணவருந்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு, தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், பேருந்து நிலையத்தில் கழிப்பறை, பயணிகளுக்கு குடிநீர் வசதி ஆகியவை குறித்தும் விசாரித்தார். பவானி நகரப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குச் சென்ற ஆட்சியர் பிரபாகர், குடிநீர் பாத்திரங்கள், தொட்டிகளைப் பார்வையிட்டதோடு,  தண்ணீர் தொட்டிகளை சுத்தமாகக் கழுவி பயன்படுத்த வேண்டும், கொசுக்குள் புகாத வகையில் துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நகரப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது, பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் சோலைராஜா, துப்புரவு ஆய்வாளர் எம்.சிவகுமார்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com