ஈரோடு மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், பள்ளிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகுவிமரிசையாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், பள்ளிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகுவிமரிசையாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காங்கிரஸின் மாநகர் மாவட்டம் சார்பில், மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மண்டலத் தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர்சாதிக், மாவட்ட துணைத் தலைவர்கள் பாபு (எ) வெங்கடாசலம், மாவட்ட துணைச் செயலாளர்கள் சிவாஜிகணேசன், கண்ணப்பன், சச்சிதானந்தம், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் பெரியசாமி, சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், சொத்து மீட்புக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஆர்.எம்.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
முன்னதாக தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னிமலை வட்டாரத் தலைவர் சிவகுமார் தலைமையில், சென்னிமலையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது. கொடுமுடி வட்டார காங்கிரஸ் சார்பில் சிவகிரியில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் மக்கள் ராஜன், ஆர்.எம்.பழனிசாமி ஆகியோர் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர்.
திண்டல் கொங்கு அறிவாலயம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான தொழில் பயிற்சி மையத்தில் சொத்து மீட்புக் குழு உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி மதிய உணவு அளித்தார். முன்னாள் சேவா தள தலைவர் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் யூனியன் தலைவர் பாலசுப்பிரமணியம், முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தரசாமி, எஸ்.டி.சந்திரசேகர், மணி (எ) சுப்பிரமணியம், மாவட்ட செய்தித் தொடர்பாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில், மாநகர் மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட துணைச் செயலாளர்கள் சீனிவாசன், பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாநில துணை பொதுச் செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமையில் மாநில துணைத் தலைவர் எஸ்.எல்.பரமசிவம் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
கோபியில்...: காமராஜர் பிறந்தநாளையொட்டி, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி சி.கே.கே. நகரில் செயல்பட்டு வரும் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப் பள்ளிக்கு, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தொடக்கக் கல்வி உதவி அலுவலர் கேசவன், பள்ளி தலைமையாசிரியர் சந்திரா, முன்னாள் தலைமையாசிரியர் கண்ணம்மாள், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலத்தில்...: சத்தியமங்கலத்தை அடுத்த வெட்டையம்பாளையம், கொமாரசாமிக் கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காமராஜரின் ஏழை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் குறித்து நாடகம் மூலமாக நடித்துக் காண்பிக்கப்பட்டது. மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டி நடைபெற்றது.
சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் வி.கே.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பள்ளியில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழாசிரியர் து.பெ.அவனாசியப்பன் பரிசுகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சத்தியமங்கலத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோரை இழந்த மாணவியருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான இலவச நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, காலணிகளை நகரத் தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம் வழங்கினார்.
பெருந்துறையில்...: பெருந்துறை, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைவர் ஜி.யசோதரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் எம்.முருகன் வரவேற்ôர். விழாவில், காமராஜர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. தமிழாசிரியர் வெ.கிருஷ்ணகுமார் காமராஜரின் சாதனைகளை எடுத்துக் கூறினார்.
விழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com