ஆடி முதல் நாள்: தேங்காய்களை சுட்டு பெண்கள் வழிபாடு

ஆடி முதல் நாளையொட்டி, ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தேங்காய்களை சுட்டு அருகில் உள்ள கோயில்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர்.  

ஆடி முதல் நாளையொட்டி, ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தேங்காய்களை சுட்டு அருகில் உள்ள கோயில்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர்.  
அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி என்பர்.  அதன்படி, ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே அனைத்து ஊர்களிலும் அம்மன் கோயில்களில் பண்டிகைகள் களைகட்டும். குறிப்பாக ஆடி மாதம் முதல் நாளில் பெண்கள் தேங்காய் சுட்டு அருகில் கோயில்களுக்குச் கொண்டு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.
பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில், தேங்காயை நார் முழுவதும் நீங்குமளவு தரையில் நன்கு தேய்த்து, அதன்பிறகு தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு அதன் நீரை முழுவதும் வெளியேற்றுகின்றனர். அதன் பின்னர், தேங்காயின் மேல் மஞ்சளைப் பூசி, தேங்காயினுள் எள், கடலை, நாட்டுச் சர்க்கரை,  பாசிப்பயறு,  ஏலக்காய் ஆகியவற்றை இட்டு அந்தத் தேங்காயை அழிஞ்சி எனப்படும் குச்சியில் செருகி,  வீட்டுக்கு அருகில் நெருப்பு மூட்டி நண்பர்கள், உறவினர்களுடன் நெருப்பில் தேங்காயை சுடுகின்றனர்.   
 தீயில் கருகி தேங்காய் நன்கு வெந்தவுடன், சுடப்பட்ட தேங்காயை  அருகில் உள்ள கோயிலுக்கு எடுத்துச் சென்று உடைத்து அங்கே சிறிதளவு வைத்து வழிபடுகின்றனர். அதன்பிறகு,  நண்பர்களுக்கும்,  உறவினர்களுக்கும் சுடப்பட்ட தேங்காய் படையலை வழங்குகின்றனர்.  
அதன்படி,  ஈரோட்டில்  பல்வேறு பகுதிகளில் பெண்கள் திங்கள்கிழமை மாலை திரண்டு தேங்காய்களை சுட்டு கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர்.  அதைத் தொடர்ந்து, சுடப்பட்ட தேங்காய் படையலை நண்பர்கள்,  உறவினர்களுடன் சாப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com