கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்க தமாகா வலியுறுத்தல்

கீழ்பவானி கால்வாயில் தண்ணீர்த் திறக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்தியுள்ளது.

கீழ்பவானி கால்வாயில் தண்ணீர்த் திறக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, இக்கட்சியின் மாநில பொதுச்செயலர் விடியல் எஸ்.சேகர்,  இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா,  மத்திய மாவட்டத் தலைவர் விஜயகுமார்,  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், நிர்வாகிகள், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் கீழ்பவானி,  தடப்பள்ளி,  அரக்கன்கோட்டை,  காலிங்கராயன் ஆகிய பகுதிகளில் கடந்த ஓராண்டாக அணையில் போதிய நீர்இருப்பு இல்லாததால் பாசனப் பகுதிகளுக்கு நீர் திறந்துவிடப்படவில்லை.
பாசனப் பகுதிகளிலும் கடும் வறட்சி காரணமாக அனைத்துப் பயிர்களும் வாடிவிட்டன.  குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சியைக் கருத்தில்கொண்டு முதலில் கீழ்பவானி வாய்க்கால் அணையிலிருந்து உயிர் நீர் திறந்துவிட வேண்டும்.
 மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, மருத்துவத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com