ஈரோட்டில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
By DIN | Published on : 20th June 2017 07:12 AM | அ+அ அ- |
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா ஈரோடு ஜவஹர் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் ரவி கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
இதில், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் புவனேஸ்வரி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் ராஜேஷ், ராஜப்பா, மண்டலத் தலைவர்கள் விவேகானந்தன், திருசெல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.