ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
 ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம், ரயில்வே காலனி குடியிருப்போர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டச் செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மகேஷ்ராவ், ஜெயராமன், கிரீஷ்குமார், சுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே உயர்நிலைப் பள்ளி தரம் உயர்த்தாமலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்காததாலும் ரயில்வே ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே காலனி கிழக்கு, மேற்கு பகுதியில் குடியிருக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நடைபாதை தடுக்கப்பட்டுள்ளதால் சிரமம் நிலவுகிறது. இதனால், காலனியில் குடியிருப்போருக்கு தொல்லை கொடுக்கும் செயலை நிறுத்தக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com