குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உப்பு - சர்க்கரை கரைசல் தூள் வழங்கும் முகாம்

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தொடக்கி வைத்து குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் தூளை வழங்கினார்.
 அப்போது அவர் கூறியதாவது:
 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்காமல் தடுக்கவும், வயிற்றுப்போக்கால் ஏற்படும் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாகக் கொண்டு வரவும், வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ள ஜூலை 1-ஆம் தேதி வரை இரண்டு வாரங்கள் வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாமை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் தூளை வீடு வீடாகச் சென்றும், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் தூளுடன் துத்தநாக சத்து மாத்திரையை சுகாதாரப் பணியாளர்கள் முன்னிலையிலும் வழங்கப்படும்.  இம்முகாமில் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை, சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை, பள்ளிக் கல்வித் துறைகள் இணைந்து செயல்படுகின்றன. மேலும், இம்முகாமிற்குத் தேவையான உப்பு சர்க்கரை கரைசல் தூள், துத்தநாக சத்து மாத்திரைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
 ஈரோடு மாவட்டத்தில் இம்முகாம்கள் மூலம் 5 வயதுக்கு உள்பட்ட 1 லட்சத்து 80 ஆயிரத்து 443 குழந்தைகள் பயன்பெறவுள்ளனர். எனவே, அனைத்து 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஜூலை 1-ஆம் தேதி வரையிலான முகாம் நாள்களில் தவறாமல் ஓ.ஆர்.எஸ் கரைசலும், வயிற்றுப்போக்கு
உள்ள குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசலுடன் துத்தநாக சத்து மாத்திரைகளையும் சுகாதாரப் பணியாளர்கள் முன்னிலையில் பெற்று அளிக்க வேண்டும் என்றார்.
 முகாமில், மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான், இணை இயக்குநர் (நலப் பணிகள்)  கனகாசலகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com