பவானி, மொடக்குறிச்சி வட்ட ஜமாபந்தி தொடக்கம்

பவானி வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

பவானி வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இதற்கு, மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் எஸ்.வி.குமார் தலைமை வகித்தார். பவானி வட்டாட்சியர் எஸ்.குணசேகரன் முன்னிலை வகித்தார். முதல் நாளான புதன்கிழமை பவானி உள்வட்டம், சிங்கம்பேட்டை, கேசரிமங்கலம், கல்பாவி, ஒலகடம், குறிச்சி, காடப்பநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு தீர்வாயம் நடைபெற்றது.
இதில், கிராம வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. மேலும், மேற்கண்ட  கிராம மக்களிடம் இருந்து பட்டா மாறுதல், முதியோர், விதவை, ஆதரவற்றோருக்கான உதவித் தொகை, குடும்ப அட்டை, மயான வசதி, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாசன வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 114 மனுக்கள் பெறப்பட்டு, துறைரீதியான நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறிச்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் விமல்ராஜ், எம்.ஆனந்தன், சுத்தானந்த சீனிவாசன், பிரகாஷ், கெளராஜ், முத்துசாமி
பங்கேற்றனர்.
அடுத்ததாக, மே 18-ஆம் தேதி ஜம்பை, ஒரிச்சேரி, புன்னம், ஆப்பக்கூடல் உள்ளிட்ட கிராமங்களுக்கும், மே 19-ஆம் தேதி பவானி, ஆண்டிக்குளம், மயிலம்பாடி, வரதநல்லூர், சன்னியாசிபட்டி, பருவாச்சி ஆகிய கிராமங்களுக்கும், மே. 23-ஆம் தேதி சின்னப்புலியூர், கவுந்தப்பாடிக்கும் ஆகிய கிராமங்களுக்கும், மே 24-ஆம் தேதி ஓடத்துறை, ஆலத்தூர், வைரமங்கலம், கெட்டிபாளையம், பெரியபுலியூர் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.
மொடக்குறிச்சியில்... மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை புதன்கிழமை பெற்றுக்கொண்டார்.
மொடக்குறிச்சி உள் வட்டத்துக்கு உள்பட்ட எழுமாத்தூர், ஈஞ்சம்பள்ளி, காங்கயம்பாளையம், குருக்கபாளையம், சாத்தம்பூர், லக்காபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் புதன்கிழமை தொடங்கியது. இதற்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். இப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், இக்கிராமங்களுக்கான வருவாய் பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
அடுத்ததாக, வியாழக்கிழமை (மே 18) புஞ்சை காளமங்கலம், நஞ்சை காளமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, குலவிளக்கு, காகம், பழங்கலம் கிராமங்களுக்கும், வெள்ளிக்கிழமை (மே 19) விளக்கேத்தி பகுதி கிராமங்களுக்கும், திங்கள்கிழமை (மே 22) அட்டவணை அனுமன்பள்ளி, முகாசி அனுமன்பள்ளி, அறச்சலூர், வடுகபட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கும், செவ்வாய்க்கிழமை (மே 23) 46புதூர், கஸ்பாபேட்டை, துய்யம்பூந்துறை ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com