ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தைப் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தைப் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 போராட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.நடராஜன் தலைமை வகித்தார். பவானி வட்டச் செயலர் எஸ்.மாணிக்கம், வட்டக் குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், ஏ.கே.பாலசுப்பிரமணியம், என்.சின்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் சின்னதுரை வரவேற்றார்.  மகாத்மா காந்தி வேலையுறுதித் திட்டம் கிராமப்புறப் பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிப் பகுதியில் வசிக்கும் கிராம மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. எனவே, பேரூர் பகுதிக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.
 இதில், கட்சியின் கிளைச் செயலர்கள் முருகேசன், ராதாமணி, பெத்தா நாயக்கர், கொளந்தசாமி, ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com