கலைத் துறை விருதுக்கு நவம்பர் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

கலைத் துறை விருதுக்குத் தகுதி உடையவர்கள் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கலைத் துறை விருதுக்குத் தகுதி உடையவர்கள் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
 தமிழகத்தின் கலைப் பண்புகளை மேம்படுத்தும், பாதுகாக்கும் நோக்கத்திலும்,  கலைஞர்களின் கலைப் பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றம் மூலமாக  5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 18 வயதுக்கு உள்பட்டோருக்கு  கலை இளமணி,  19 முதல் 35 வயது பிரிவினருக்கு  கலை வளர்மணி,  36 முதல் 50 வயது பிரிவினருக்கு  கலை சுடர்மணி, 51 முதல் 60 வயது பிரிவினருக்கு கலை நன்மணி,  61 வயதுக்கு  மேற்பட்ட பிரிவினருக்கு கலை முதுமணி  என வயதுக்குத் தக்க விருதுகள் வழங்கப்பட உள்ளன.
 குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகக் கலைஞர்கள், நாதசுரம், தவில், வயலின்,  மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்கள்,  கரகம்,  காவடி, பொய்க்கால் குதிரை, அரசன் அரசி ஆட்டம்,  மரக்கால் ஆட்டம்,  தெருகூத்து ஆகிய கலைகள் உள்ளிட்ட கிராமியக் கலைகளைத் தொழிலாகக் கொண்டு கலைத் துறையில் சாதனை படைத்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.  
 மாவட்டக் கலை மன்ற விருதாளர் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு அரசு விழாவில் இவ்விருது வழங்கப்படும். கலைஞர்கள் விருது பெற தங்களது சுய விவரக் குறிப்புடன் வயது, பணியறிவு ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகைப்படம் இணைத்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  நவம்பர் 20-ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டல கலைப் பண்பாட்டு மையம், அரசு இசைக் கல்லூரி வளாகம், செட்டிபாளையம் பிரிவு, மலுமிச்சம்பட்டி (அஞ்சல்), கோவை- 641 050 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 மேலும், விவரம் வேண்டுவோர் கலைப் பண்பாட்டுத் துறையின் கோவை மண்டல அலுவலகத்தை 0422-2610290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com