நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம்: எக்கட்டாம்பாளையம் ஊராட்சி தேர்வு

 நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டுக்கு சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட எக்கட்டாம்பாளையம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டுக்கு சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட எக்கட்டாம்பாளையம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 நாடு முழுவதும் உள்ள மக்களவை உறுப்பினர்கள் ஆண்டுதோறும் ஒரு கிராம ஊராட்சியைத் தேர்வு செய்து, அதில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தும் புதிய திட்டம் பிரதமரால் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்த ஆண்டு ஈரோடு மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் கிராம ஊராட்சியைத் தேர்வு செய்துள்ளார். இதற்கான, அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நல்லபாழி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.   கூட்டத்துக்கு, ஈரோடு மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பிரபாகர் முன்னிலை வகித்தார். சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார்.
 இதில், காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் தனியரசு, திட்ட இயக்குநர் சீனிவாசன், மாநில கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com