ஆதரவற்ற முதியோர், குழந்தைகளை மீட்க உதவி எண் அறிமுகம்

ஆதரவற்ற முதியோர்,  குழந்தைகளை மீட்க உதவி எண் 0424-4972297 ஈரோட்டில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆதரவற்ற முதியோர்,  குழந்தைகளை மீட்க உதவி எண் 0424-4972297 ஈரோட்டில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,  இதயம் அறக்கட்டடளை  ஆகியவை இணைந்து இந்த எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளன.  இந்த உதவி எண் (0424-4972297) அறிமுக நிகழ்ச்சி மாநகராட்சி திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அ.சுரேஷ் இந்த உதவி எண்ணை அறிமுகப்படுத்த, இதயம் அறக்கட்டளை இயக்குநர் ஜி.ஆர்.சிவகுமார் பெற்றுககொண்டார்.
இதயம்  அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோர்கள்,  பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்கும் பணி மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு இதயம் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லம்,  குழந்தைகள் இல்லம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்திலும் முதியோர், குழந்தைகள் இல்லத்தை திறக்க இதயம் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.  புதிய இல்லங்கள் திறக்கப்படும் வரை மீட்கப்படும் ஆதரவற்றோர் அரசு பராமரிப்பில்  ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இதயம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வி.உஷாராணி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com