பாம்பு பிடிப்பது குறித்து வனத் துறையினருக்குப் பயிற்சி

பாம்பு பிடிப்பது குறித்து வனத் துறையினருக்கு சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

பாம்பு பிடிப்பது குறித்து வனத் துறையினருக்கு சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
 இந்தியாவில் பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாம்புகள் புகாதபடி பாதுகாப்பது குறித்து வனத் துறை, உலகளாவிய இயற்கை  நிதியகம் ஆகியவை இணைந்து வனத் துறை ஊழியர்களுக்கு சிறப்பு  பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
 இதில், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை ஆகிய வனச் சரகங்களைச் சேர்ந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள், பயிற்சி வனவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 பாம்பு கடித்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுதவி செய்வது குறித்தும், பாம்புக் கடிக்கு செய்யக் கூடாத செயல்கள் குறித்தும் குறும்படம் காண்பிக்கப்பட்டது. விஷமுள்ள மற்றும் இல்லாத பாம்புகள் குறித்து விளக்கப்பட்டது. பாம்பு பிடிப்பது, வனப் பகுதிக்குள் விடுவது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
 மேலும், கிராமங்களில் வாழும் மக்கள், விவசாயிகள் டார்ச் லைட் இல்லாமல் வெளியே செல்லக் கூடாது. பெருநகரம், கிராமங்களில் குடியிருப்பு முன் அடுக்கி வைத்துள்ள செங்கல் குவியல்,  தேங்கியிருக்கும் குப்பை, மரத்துண்டுகள், குவிந்து வைத்துள்ள டயர்கள் ஆகியவற்றில் பாம்புகள் எளிதாகத் தங்கிக் கொள்ளும்.
இரை தேடிச் செல்லும்போது தரைமட்டத்திலான துவாரம் உள்ள வீட்டின் கதவு வழியாக  பாம்புகள் உள்ளே புகுந்து விடுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. இதைத் தவிர்க்க வீட்டின் முன்பு எந்தவொரு குவியலும் வைக்கக் கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com