பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ. 16.86 லட்சம் காணிக்கை

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 21 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ. 16.86 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 21 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ. 16.86 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
மொத்தம் உள்ள 21 உண்டியல்களும் ஆதிகேசவப் பெருமாள் கோயில் மண்டபத்தில் திறக்கப்பட்டு, பண்ணாரியம்மன் கோயில் துணை ஆணையர் பழநிகுமார், சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் ராமு முன்னிலையில் எண்ணப்பட்டன.
பள்ளி மாணவர்கள், கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
இதில், சங்கமேஸ்வரர் கோயில், வேதநாயகியம்மன், பெருமாள் சன்னிதிகளில் வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்களில் மொத்தம் ரூ. 15,37,698 காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது. மேலும், பசு பராமரிப்புக்கு ரூ. 58,995, பழனியாண்டவர் கோயிலுக்கு ரூ. 39,112, காசிவிஸ்வநாதர் கோயில் உண்டியலில் ரூ.8,830, யானை பராமரிப்புக்கு ரூ.41,849, தங்கமாக 38 கிராமும், வெள்ளியாக 248 கிராமும் செலுத்தப்பட்டிருந்தது.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மொத்தம் ரூ. 16,86,484 காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. கோயில் கண்காணிப்பாளர் கொளந்தாயாள், ஆய்வாளர் ரவிகுமார் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com