கோபி பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் டெங்கு கொசு  ஒழிப்புப் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பணிகளை கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் டெங்கு கொசு  ஒழிப்புப் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பணிகளை கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் சுகாதாரப் பணியாளர்கள், களப் பணியாளர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினர் சுகாதார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில கோபி அருகே, கடுக்காம்பாளையத்தில் சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள், வீடுவீடாகச் சென்று தொட்டிகளில் உள்ள தண்ணீரைச் சோதனை செய்து, அவற்றில்  புழுக்கள் இருப்பின், கொசுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தெளித்தும், சாக்கடைகளில்  மருந்துகள் தெளித்தும், கிராமம்  முழுவதும் கொசுப் புகை அடித்தும், காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பரிசோதனை செய்தும், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தப் பணிகளை கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி நேரில் ஆய்வு செய்து பொது மக்களிடம், டெங்கு பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கி, வீடுகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள பழைய டயர்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். மேலும்,  அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் பொது மக்களும் ஈடுபட வேண்டும் என்றும் சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com