நந்தா கலைக் கல்லூரியில் கலைப் போட்டிகள்

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை கலைப் போட்டிகள் நடைபெற்றன.

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை கலைப் போட்டிகள் நடைபெற்றன.
கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறை சார்பில், மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் "ரேடியன்ஸ்-17' எனும் விழா அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கியது.
விழாவை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தார்.  ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வெ.சண்முகன் தலைமை வகித்தார்.
ஈடிசியா அமைப்பின் தலைவர் கே.வெங்கடேஷ், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் இரா.குப்புசாமி வரவேற்றார்.
நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் எஸ்.பி.விஸ்வநாதன், முதன்மைச் செயல் அலுவலர் எஸ்.ஆறுமுகம், கல்லூரிச் செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப்,  எஸ்.திருமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இதில், அறிவுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களின் பல்வேறு படைப்புகளும், உள்,  வெளி விளையாட்டுகளும் நடைபெற்றன.  போட்டி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியில் நந்தா கலை, அறிவியல் கல்லூரி,  நந்தா மருந்தியல், முடநீக்கியல்,  செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களும்,  நந்தா சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளும் என  8,000 பேர் பங்கேற்றனர். வணிக மேலாண்மை துறைத் தலைவர் ப.அய்யப்பன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com