அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகள், விலங்குகளைப் பாதுகாக்க வலியுறுத்தல்

அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகள், வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என ஈரோடு கவுந்தப்பாடி ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் கே.வி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகள், வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என ஈரோடு கவுந்தப்பாடி ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் கே.வி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உலகில் மற்ற வகை உயிரினங்களைக் காட்டிலும் பாலூட்டிகளே முதன்முதலில் உருவானதாகக் கூறப்படுகிறது. உச்ச உயர்வு பால்குடி உயிரினங்களான வால் இல்லா குரங்குகள், குரங்குகள் மனிதர்கள் என இன்றைய நிலை வரை விரிவடைந்திருக்கிறது.
வானலாவிய மரங்கள், செடி ,கொடிகள், புற்கள், மூலிகைச் செடி மரங்கள் என்று விரிவடைந்த காடுகள் அழிக்கப்பட்ட காரணங்களினாலும், வன விலங்குகளின் வாழும் பகுதி சுருங்கி குறுகிய எல்லைக்குள் வாழ வேண்டிய கட்டாயத்தை அதற்கு ஏற்படுத்திய காரணங்களில்தான் அவை காட்டைவிட்டு வெளியேறுகின்றன.
இயற்கையின் சீற்றத்தால் குடிக்க நீரின்றி தாகம் தணிக்க தடம் மாறி நாட்டுக்குள் புகுந்துவிடும் நிலை ஏற்படுகிறது. மேற்கூறிய காரணங்களினால் பறவைகள், பாலூட்டிகள், நீர், நில வாழ்வன, ஊர்வன அழிவின் விளிம்பை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது வேதனை அளிக்கும் விஷயங்களாகும்.
பாலூட்டிகளில் நீலகிரி மந்தி, தங்க நிற மந்தி, சிங்கவால் குரங்கு, வெள்ளைப் புருவ குரங்கு, ஒல்லி, பெரிய தேவாங்குகள், யானை, சிங்கம், புலிகளும் அழிந்து கொண்டுள்ளன. பளிங்குப் பூனை, லிங்க்ஸ் பூனை, ஓநாய், இந்தியக் குள்ள நரி, செந்நாய், பழுப்புக் கரடி, புனுகு பூனை, மலபார் புனுகு பூனை, புள்ளி லிங்க்சாங், ஆசியா காட்டுக் கழுதை, சிவப்புப் பாண்டா, எறும்புத் தின்னி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், சடைமாடு சதுப்புநில மான், நாலு கொம்பு மான், நீலகிரி வரையாடு, கஸ்தூரி மான், ஹிஸ்புட் காட்டு முயல், புலி போன்றவைகளும் அழிந்து வருகின்றன.
இந்தியப் பஸ்டர்டு, பெரிய இருவாச்சி லிக், ளோரிக்கான், சைபீரிய கொக்கு, இமயமலை மோனல் பசண்ட் உள்ளிட்டவையும் அழிவின் விளிம்பில் உள்ளன. அரிய வகை பறவைகளான கவுதாரி பூநாரை, வல்லூறு, தீக்கோழி காலப்போக்கில் அழிந்து வருகின்றன. டோடோ எனும் பறவை 1680-ஆம் ஆண்டோடு அழிந்துவிட்டது.
வட அமெரிக்காவின் புறா, மடகாங்கரின் யானைப் பறவை, புளோரிடாவின் வண்ணக் கழுகு,  தென் ஆப்பிரிக்காவின் குவாக்கா ஆகியவை அழிந்தே பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.
தொலைபேசி கம்பங்களுக்கு இடையே இருக்கும் கம்பிகளில் ஓரிடம்கூட இடைவெளியின்றி அமர்ந்து இருக்கும் சிட்டுக் குருவிகளைக் காண முடியவில்லை. ராஜாளி என்கிற கழுத்தில் வெள்ளை நிறம் கொண்ட பருந்தை இப்போது பார்க்கவே முடியவில்லை. டால்பின் இனங்களும் இப்போது அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஊர்வனவற்றில் கடல் ஆமை, அழுங்காமை, தோல் ஆமை, கங்கை முதலை, கழிமுக முதலை, சதுப்பு நில முதலை, இந்திய உடும்பு, நீர் உடும்பு போன்றவைகளும் அழிந்து வருகின்றன. பாம்பு வகைகளில் ராஜாமலைப் பாம்பு, இந்திய முட்டை தின்னிப் பாம்பு, நீர் நிலத்தில் வாழ்வனவான இமயமலை நியூட், மலபார் மலைத் தேரை, கேரோ மலைத் தேரை, முதுகெலும்பில்லா பிராணிகளான கிருஷ்டேஷியா எனும் நண்டு, நத்தை முதலானவைகளும், 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய 50,000-க்கும் அதிகமான வகைகள் உள்ள பூச்சிகளில் அதன் உறைவிட அழிப்பு, சுற்றுச்சூழல் மாசு, அதிக அளவில் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவைகளாலும் வேட்டையாடுதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களாலும் பறவைகளும், பாலூட்டிகளும் அழிந்து வருகின்றன.
இந்த வன விலங்குகள், அரிய வகை பறவைகள் அழிவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பொதுமக்களும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com