உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் டெங்கு பாதிப்பு: தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால்தான் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது என்று தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால்தான் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது என்று தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க ஈரோடு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாமைத் தொடக்கிவைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் பாதிக்கப்படுவதால் இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 500 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்துள்ளனர். ஆனால், டெங்குவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.  உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தாததால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
 தமிழக அரசின் செயல்பாடற்ற தன்மையைக் கண்டித்து, தமாகா இளைஞரணி சார்பில் 2,500 இடத்தில் தொடர்ந்து 20 நாள்களுக்கு காலை, மாலை இரு வேளையும் இலவசமாக நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படும்.
 கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்னையில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி செயல்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை,  ஈரோடு, சேலம்,  நாமக்கல்,  திருப்பூர்,  தருமபுரி,  கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில்  விவசாயிகளைத் திரட்டி அக்டோபர் 24-ஆம் தேதி விழிப்புணர்வுப் பேரணி, பிரசாரப் பணிகளில் ஈடுபடுவோம்.
பெட்ரோல்,  டீசலுக்கு தமிழக அரசு வாட் வரியில் இருந்து லிட்டருக்கு ரூ. 10 வீதம் குறைக்க வேண்டும் என்றார்.
இதில், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர்,  மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார்,  மக்களவை இளைஞரணித் தலைவர் ரமேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com