கொசு ஒழிப்புப் பணி: பொதுமக்கள் ஒத்துழைப்பு தர ஆட்சியர் வேண்டுகோள்

கொசு ஒழிப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொசு ஒழிப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் பகுதியில்  கொசு ஒழிப்புப் பணியை அவர் புதன்கிழமை ஆய்வு செய்தார். 46 புதூர் ஊராட்சியில் கொசு ஒழிப்புப் பணியைப் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாலின் தரத்தை ஆய்வு செய்தார்.
46 புதூர் ஊராட்சியில் கொசு ஒழிப்புப் பணியைத் தீவிரப்படுத்த 2 புதிய கொசு புகை அடிக்கும் இயந்திரத்தைக் கொள்முதல் செய்யும்படி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.  தொடர்ந்து, சின்னகருக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமைப் பார்வையிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கொசு ஒழிப்புப் பணியில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்,    ஊராட்சிகளில் தினந்தோறும் காலை அல்லது மாலை வேளைகளில் அந்தந்தப் பகுதி மக்கள் தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பணியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இணைந்து கொசு ஒழிப்புப் பணியைத் தீவிரப்படுத்தி வேண்டும். கொசு உற்பத்தியாகும் பகுதியைக் கண்டறிந்து அதை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைப்பு தர  வேண்டும். இது ஒரு கூட்டு இயக்கமாக மாற்றி பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், லக்காபுரம் ஊராட்சியில் புதுவலசு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கொசு ஒழிப்பு பணியைப் பார்வையிட்டார். வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் கூட்டு தூய்மைப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பு குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. இக்குழு அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று கொசு ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொள்ளும் என்றார்.
ஆய்வின்போது, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் பெ.பாலுசாமி, அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com