தீபாவளி: ஈரோட்டில் அக்டோபர் 14 முதல் போக்குவரத்து மாற்றம்

தீபாவளியையொட்டி ஈரோடு நகரில் அக்டோபர் 14 முதல் 17-ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வடுகம் இரா.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

தீபாவளியையொட்டி ஈரோடு நகரில் அக்டோபர் 14 முதல் 17-ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வடுகம் இரா.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை விடுத்த செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 14 முதல் 17-ஆம் தேதி வரை ஆர்.கே.வி. சாலை, நேதாஜி சாலை,  கனி மார்க்கெட் சாலை, மேட்டூர் சாலைகளில் வந்து செல்லும் பேருந்துகள் மாற்றம் செய்யப்படுகின்றன. ஈரோடு நகருக்கு வந்து செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், நகர பேருந்துகள் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றத்துக்குகேற்ப செல்ல வேண்டும்.
சேலம், நாமக்கல் பகுதிகளில் இருந்து வந்து கரூர், பெருந்துறை மார்க்கமாகச் செல்லும் கன ரக சரக்கு வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தை தவிர காவேரி சாலை,  குப்பண்ணா சந்திப்பு,  கே.என்.கே. சாலை, பூங்கா சாலை வழியாக வந்து கிருஷ்ணசெட்டி வீதி வழியாக சத்தி சாலை, நாச்சியப்பபா வீதி, எம்.ஜி.ஆர். சிலை,  ஈ.வி.என். சாலை வழியாக கரூர், பெருந்துறை சாலைக்குச் செல்ல வேண்டும்.  
பெருந்துறை சாலையில் இருந்து வரும் கன ரக வாகனங்கள், லாரிகள் வீரப்பன்பாளையம் பிரிவு வழியாக வில்லரசம்பட்டி கனிராவுத்தர் குளம் வழியாக சத்தி சாலை செல்ல வேண்டும். அதேபோல, கரூர், காங்கயம், சென்னிமலையில் இருந்து வரும், செல்லும் கன ரக வாகனங்கள் சென்னிமலை சாலை,  முத்தம்பாளையம்,  தெற்குபள்ளம் சாலை வழியாக திண்டல், பெருந்துறை இருவழி சாலையாக செல்ல வேண்டும்.  
காவிரி சாலை, பள்ளிபாளையம் காகித ஆலை காலனி வழியாக வரும் எண் 1 கொண்ட பேருந்துகள், ஷேர் ஆட்டோ, சிற்றுந்துகள்,  காமராஜ் பள்ளி,  மீன் சந்தையில் இருந்து  குப்பக்காடு வழியாக பூங்கா சாலை வந்து சத்தி சாலை,  நாச்சியப்பா வீதி வழியாக அரசு மருத்துவமனை செல்ல வேண்டும்.
மறு மார்க்கமாக வரும் பேருந்துகள் பன்னீர்செல்வம் பூங்கா,  சவீதா மருத்துவமனை,  டி.ஒ. பாயிண்ட் வழியாக பேருந்து நிலையம்,  சத்தி சாலை, குப்பக்காடு,  காமராஜ் பள்ளி வழியாக காவிரி சாலையை அடைய வேண்டும்.
காவிரி சாலையில் வரும் மினிடோர்,  சிற்றுந்துகள் போன்ற இலகு ரக வாகனங்கள் கிருஷ்ணா திரையரங்கு, மாதவகிருஷ்ணா வீதி வழியாக மரப்பாலம் செல்ல வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காளைமாட்டுச் சிலை வழியாக பன்னீர்செல்வம் பூங்கா வரை கன ரக வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், பன்னீர்செல்வம் பூங்கா,  சி.எஸ்.ஐ. தேவாலயம் பகுதியில் பேருந்துகளை நிறுத்தாமல் மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆள்களை இறக்கி டைமண்ட் ஆப்டிகல்ஸ்,  அகில்மேடு வீதி வழியாக பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து நேதாஜி சாலை வழியாக வரும் வாகனங்கள் அக்டோபர் 14 முதல் 17-ஆம் தேதி வரை எல்லைமாரியம்மன் கோயில் வரை அனைத்து வாகனங்களும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.         
பெருந்துறை சாலையில் இருந்து வரும் பேருந்துகள் எம்.ஜிஆர். சிக்னலை கடந்து டைமண்ட் ஆப்டிகல்ஸ், அகில்மேடு வழியாகப் பேருந்து நிலையம் அடைய வேண்டும். எக்காரணம் கொண்டும் மேட்டூர் சாலையில் செல்லக் கூடாது. மறு மார்க்கமாக வழக்கமான சாலை வழிகளிலேயே செல்ல வேண்டும்.    
சத்தி, பவானி சாலைகளில் செல்லும் பேருந்துகள் வழக்கமான சாலை வழிகளிலேயே செல்ல வேண்டும்.  ஈரோடு நகரப் பகுதிகளில் கன ரக வாகனங்கள், லாரிகள் ஈரோடு நகரில் நரிப்பள்ளத்தில் உள்ள நிறுத்தம் பகுதியில் மட்டுமே நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பூந்துறை, சோலார் வழியாக வரும் நகரப் பேருந்துகள் காளைமாட்டு சிலை , பிரப் சாலை,  சவிதா மருத்துவமனை,  டைமண்ட் ஆப்டிகல்ஸ்,  அகில்மேடு வீதி வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
மற்ற அனைத்துப் பேருந்துகளும் காளைமாட்டுச் சிலை, சூரம்பட்டி நால்ரோடு, எம்.ஜி.ஆர் சிலை, டைமண்ட ஆப்டிகல்ஸ், அகில்மேடு வீதி வழியாகப் பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
 ஆர்.கே.வி. சாலை, நேதாஜி சாலை,  கனிமார்க்கெட் சாலை, மேட்டூர் சாலை, கச்சேரி சாலைகளில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தையோ,  தங்கள் கடைகளில் வேலை செய்யும் வேலையாள்களின் வாகனங்களையோ கடைகளின் முன் நிறுத்தாமல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுத்துமிடங்களில் நிறுத்தி போக்குவரத்துக் காவலருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
வாகன நிறுத்த இடங்கள்:
காவிரி சாலை வழியாக வரும்  இருசக்கர வாகனம்,  நான்கு சக்கர வாகனம், இலகு ரக வாகனம்,  காமராஜ் பள்ளி வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம். மரப்பாலம் வழியாக வந்து மார்க்கெட் வரும் இரு, நான்கு சக்கர வாகனங்கள் மார்க்கெட் பின்புற வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.
பிரப் சாலை, மேட்டூர் சாலை வழியாக வரும் இரு, நான்கு சக்கர வாகனங்கள் செங்குந்தர் பள்ளி, சி.எஸ்.ஐ. பள்ளி வளாக மைதானத்தில் நிறுத்திக் கொள்ளலாம். காளைமாட்டுச் சிலை, சென்னிமலை சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் காந்திஜி சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைய பள்ளியில் நிறுத்த வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு நகர பொதுமக்கள், அனைத்து வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஈரோடு காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com