மானிய விலையில் விதை நெல் விநியோகம்: வேளாண் அதிகாரி தகவல்

மானிய விலையில் விதை நெல் விநியோகம் செய்யப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மானிய விலையில் விதை நெல் விநியோகம் செய்யப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் பாசனத்தில் தற்போது நெல் சாகுபடி செய்ய தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் விவசாயிகள் தற்போதைய பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகங்கள் குறித்து, தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம், ரகங்களே அடிப்படை காரணிகளாக அமைகிறது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போதைய பின் சம்பா (செப்டம்பர் முதல் அக்டோபர் வரை) பருவத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பரிந்துரை செய்யப்பட்ட கோ 50, கோ 51, கோ 52, ஏ.டி.டி  49,  ஐ.ஆர் 20, சி.ஆர். 1009 போன்ற 135 நாள்கள் வயதுடைய, நடுத்தர வயதுடைய நெல் ரகங்களே  இப்பருவத்துக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.
மேற்கண்ட ரகங்களில் நெல் குலை நோய், தத்துப் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன்  கொண்ட கோ 50 ,கோ 51, ஏ.டி.டி. 50 போன்ற விதை நெல் ரகங்கள் தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலும், கள்ளிப்பட்டி, நால்ரோடு, காசிபாளையம் உள்பட மூன்று துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய  அளவு  இருப்பு  வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் மானிய விலையில் விதைகளைப் பெற்று பயனடையலாம்.
மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com