மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் திறப்பு

மத்திய அரசின் சூரம்பட்டி நால்ரோடு, மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

மத்திய அரசின் சூரம்பட்டி நால்ரோடு, மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
நாட்டில் மருந்து விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், மத்திய அரசின் ஜன் ஒளஷதி (மக்கள் மருந்தகம்) என்ற திட்டம் 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பின் தற்போது இத்திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் 3 ஆயிரம் மக்கள் மருந்தகம் கடையைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட மருந்தகங்களில் நோயாளிகளின் மருத்துவச் செலவு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறையும். மருத்துவர்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கும் மருந்துச் சீட்டில் எழுதும்போது மருந்துகளின் பொதுப் பண்புகளை (மாலிக்கூல்ஸ்) குறிப்பிட்டு பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
மக்கள் மருந்தகங்களில் தற்போது 600-க்கும் மேற்பட்ட மருந்துகள் வலுப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் நீரிழிவு, இதய நோய், ரத்தக் கொதிப்பு, இரைப்பை, வைட்டமின் குறைபாடுகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான மருந்துகள் உள்ளன. மேலும், புற்றுநோய், சிறுநீரக நோய்க்கான மருந்துகள், ஊசிகளும் விரைவில் குறைந்த விலையில் விற்பனைக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் மக்கள் பாதை இயக்கம் சார்பில் ஈரோடு மாநகரில் 2 மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இதில், ஈரோடு, சூரம்பட்டி, நால்ரோடு எஸ்கேசி பிரதான சாலையில் மக்கள் மருந்தகம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கட்டடப் பொறியாளர்கள் சங்க மாநில கெளரவத் தலைவர் மோகன்ராஜ் கலந்துகொண்டு முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தார்
இந்நிகழ்ச்சியில் கடையின் பொறுப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் ஈரோடு, மூலப்பாளையம், நாடார்மேடு பகுதியில் மற்றொரு மருந்தகமும் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com