ஈரோடு அறிவுத் திருக்கோயிலில் பட்டப் படிப்பு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு அறிவுத் திருக்கோயிலில் பட்டய, பட்டப் படிப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஈரோடு அறிவுத் திருக்கோயிலில் பட்டய, பட்டப் படிப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
உலக சமுதாய சேவா சங்கம், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் யோகமும் மனித மாண்பும் கல்வியின் பட்டய, பட்டப் படிப்புகளுக்கான நடப்பு கல்வி ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா ஈரோடு அறிவுத் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவில், உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் பங்கேற்று பட்டய, பட்டப் படிப்புகளில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வகுப்புகளைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:
ஆன்மிக கல்வியை மக்களிடையே கொண்டு செல்ல 2004-ஆம் ஆண்டு வேதாத்திரி மகரிஷி ஆன்மிக, உள்ளுணர்வு கல்வி நிலையம் என்ற அமைப்பை ஆழியாரில் நிறுவினார். இந்த அமைப்பு மூலம் 30 பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு சான்றிதழ், பட்டயம், இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், ஆராய்ச்சி படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் 1,30,000-க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளனர் என்றார்.
விழாவில், ஈரோடு எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் எம்.ராமூர்த்தி ஆன்மிகம் குறித்துப் பேசினார்.
இதில், ஈரோடு மனவளக்கலை மன்ற திட்ட அதிகாரிகள் எஸ்.மகாலட்சுமி, ஆர்.ராதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் எம்.நடராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com