உரிமம் பெறாத உணவு வணிகர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

உரிமம் பெறாத உணவு வணிகர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

உரிமம் பெறாத உணவு வணிகர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு, தரங்கள் சட்டத்தின்கீழ் உரிமம், பதிவுச் சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கு மேல் வியாபாரம் செய்யும் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் ரூ. 3 ஆயிரமும், விற்பனையாளர்கள் ரூ. 2 ஆயிரமும், ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கு குறைவாக வியாபாரம் செய்யும் அனைத்து உணவு வணிகர்களும் ஓர் ஆண்டுக்கு ரூ. 100-ம் கருவூலத்தில் செலுத்திய சீட்டு மூலம் வங்கியில் செலுத்தி,  இணையதளம் மூலமாக உரிமம், பதிவுச்சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு உரிமம், பதிவு சான்று பெற விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து 15 நாள்களுக்குள் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.
உரிமம், பதிவுச் சான்று பெறுவதற்கு உரிமையாளரின் அடையாள அட்டை நகல், பங்குதாரர் ஒப்பந்த நகல், முகவரி உறுதிச் சான்றிதழ், தயாரிப்பு நிறுவனத்தின் வரைபட நகல், வாடகை ஒப்பந்த நகல், மின் கட்டண ரசீது, உணவுப் பொருள் தயாரிப்பு,
விற்பனை விவரம் ஆகிய விவரங்களுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே உரிமம், பதிவு பெற்றவர்கள் தங்களது காலாவதி தேதிக்கு 30 நாள்களுக்கு முன்பாக கருவூலத்தில் செலுத்திய சீட்டின் மூலம் பணம் செலுத்தி உரிய ஆவணங்களுடன் இணையதளத்தின் மூலமாக தங்களது உரிமம், பதிவுச் சான்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் 18,002 அரசு, தனியார் உணவு வணிகர்கள் உள்ளனர். இவர்களில் இதுவரை 1,829 உணவு வணிகர்கள் உரிமமும், 7,864 உணவு வணிகர்கள் பதிவுச் சான்றிதழும் பெற்றுள்ளனர். இதுவரை உரிமம் பெறாத உணவு வணிகர்கள் உடனடியாக உரிமம், பதிவுச் சான்று பெற விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்று பெறாத உணவு வணிகர்கள் மீது உணவுப் பாதுகாப்பு, தரங்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவுப் பொருள் தொடர்பான புகார்களை 0424-2223545 என்ற எண்ணிலோ அல்லது 94440 -42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com