இன்று திமுக பொதுக்கூட்டம்: முதன்மைச் செயலர் துரைமுருகன் பங்கேற்பு

ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெறும் திமுக பொதுக் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் பங்கேற்கிறார்.

ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெறும் திமுக பொதுக் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் பங்கேற்கிறார்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொதுக் கூட்டம் காளைமாட்டுச் சிலைஅருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் எம்.கந்தசாமி, மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com